புத்தாண்டு கொண்டாட்டத்தில் திளைத்திருந்த மக்கள்…தலைகீழாக மாறிய நிலைமை..ரத்தவெள்ளத்தில் சரிந்த பலர்

0
323

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சீன லூனார் புத்தாண்டை கொண்டாடி வந்த மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோர சம்பவம்

குறித்த சம்பவத்தில் இதுவரை 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் காயங்களுடன் 9 பேர் தப்பியதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பொலிசார் தெரிவித்த தகவல் இதுவென, உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தொடர்புடைய கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான லூனார் புத்தாண்டு விழாவினை திரளான மக்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் கொண்டாடி வந்தனர்.

இந்த நிலையில், திடீரென்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். தாக்குதல்தாரி இதுவரை சிக்கவில்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மில்லியன் கணக்காக

சம்பவம் நடந்த பகுதியில் தற்போது பொலிசார் மற்றும் அவசர உதவிக்குழுவினர் ஆம்புலன்ஸ் சேவையுடன் குவிக்கப்பட்டுள்ளனர். ஞாயிறன்று லூனார் புத்தாண்டை கொண்டாடும் வகையில் சீன மக்கள் தங்கள் உறவினர்கள் நண்பர்களை சந்திக்க நாட்டின் பல பகுதிகளுக்கு செல்வார்கள் எனவும்,

புத்தாண்டு கொண்டாட்டத்தில் திளைத்த மக்கள்... சில நொடியில் தலைகீழாக மாறிய நிலைமை: ரத்தவெள்ளத்தில் சரிந்த பலர் | Chinese New Year Party Horror Mass Shooting

திரளான மக்கள் கோவில்களுக்கும் செல்வார்கள் எனவும் கூறுகின்றனர். 3 ஆண்டு காலம் கொரோனா கட்டுப்பாடுகளால் முடங்கியிருந்த சீன மக்கள் இந்தமுறை மில்லியன் கணக்காக சுற்றுலா மற்றும் குடும்பங்களை சந்திக்கவும் செல்வார்கள்.