அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனையால் பரபரப்பு!

0
423

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனையால் பரபரப்பு! | Fbi Raid At Us President Joe Biden S House

இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் ஆகும்.

அரசின் அதிமுக்கிய, ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனையால் பரபரப்பு! | Fbi Raid At Us President Joe Biden S House

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

சுமார் 13 மணி நேரம் நடந்த சோதனையில் ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்க அதிபர் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.