நுவரெலியா கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி!

0
42

நுவரெலியா – நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் – வேன் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று (21-01-2023) ஹட்டன் – டிக்கோயா ஜும்மா பள்ளிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு பள்ளிவாசலில் சடலங்கள் வைக்கப்பட்ட பின்னர், இஸ்லாமிய சம்பிரதாயப்படி முதலில் குடும்பத்தினர், பிறகு பெண்கள், பிறகு ஆண்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், இன்று அதிகாலை 3 மணியளவில் இஸ்லாமிய மத சடங்குகள் மற்றும் ஏனைய சடங்குகளின் பின்னர் சடலங்கள் அட்டன் டிக்கோயா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த இறுதி அஞ்சலியில் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி | Last Tribute To Those Died Nuwara Eliya Accident