குருநாகல் மேயர் பதவியில் இருந்து துஷார சஞ்சீவ நீக்கம்!

0
254

குருநாகல் நகர மேயர் பதவிலிருந்து துஷார சஞ்சீவ நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட வர்த்தமானி மூலம் இதனை அறிவித்துள்ளார்.

குருநாகல் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்படாமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.