கடனாவில் தாய்க்கு தெரியாமல் 2100 டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை வாங்கிய 6 வயது சிறுமி!

0
37
Mother and son looking out of window

கடனாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியலில் 6 வயது சிறுமி தனது தாய்க்கு தெரியாமல் $2,100 மதிப்புள்ள அமேசான் பொருட்களை வாங்கியுள்ளார். தாயின் அமேசன் கணக்கினைப் பயன்படுத்தி இந்தப் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் தமக்கு கிடைக்கப் பெற்ற மின்னஞ்சல்கள் அனைத்துமே ஸ்பாம் மெயில்கள் என தாம் கருதியதாக சிறுமியின் தாயான மெலிஸா மொபிடா (Mélissa Moffette) தெரிவிக்கின்றார்.

எனினும், விநியோக வண்டியின் மூலம் 35 பொருட்கள் வீட்டிற்கு வந்திறங்கிய போதே இந்த விடயம் தமக்கு தெரியவந்தது என அவர் குறிப்பிடுகின்றார்.

தாய்க்கு தெரியாமல் 2100 டொலர் பெறுமதியான பொருள் கொள்வனவு | Don T Tell Mom Quebec Girl 6

தனது அமேசன் கணக்க ஹெக் செய்யப்பட்டதாக கருதியதாகவும் பின்னர் ஆறு வயது மகள் இவற்றை கொள்வனவு செய்தமை தெரியவந்தது எனவும் குறிப்பிடுகின்றார்.

28 விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை குறித்த சிறுமி தாய்க்கு தெரியாமல் கொள்வனவு செய்துள்ளார். 

பெருந்தொகை பணத்தினை இவ்வாறு விரயமாக்கியமை கவலையளித்த போதிலும் பின்னர் அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டதாக குறித்த பெண் தெரிவிக்கின்றார்.