45 வருட தனிமைச் சிறை… சரித்திரம் படைத்த பிரிட்டிஷ் கொலைகாரன்

0
34

பிரிட்டனின் மிகவும் கொடூரமான கொலையாளிகளில் ஒருவர் நீண்ட பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் கழித்து சமீபத்திய வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

Robert Maudsley என்ற கொடூர கொலைகாரனே சுமார் 45 ஆண்டுகள் தற்போது தனிமைச் சிறையில் செலவிட்டுள்ளார். 69 வயதான அவரை பொதுமக்களிடையே அனுப்பவும் அச்சப்படுவதாக நீதித்துறை கவலை தெரிவித்துள்ளது.

45 ஆண்டுகள் தனிமைச் சிறை... வரலாறு படைத்த பிரிட்டன் கொலைகாரன் | Solitary Confinement British Killer World Record

நாட்டின் மிக மோசமான குற்றவாளிகளை சிறை வைத்திருக்கும் பகுதியில் அடைக்கப்பட்டுள்ளார் Robert Maudsley. 1978ல் தம்முடன் சிறையில் இருந்த நன்கு அறிமுகமான இருவரை கொடூரமாக கொலை செய்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின்னர் இவருக்கெனவே உருவாக்கிய அறையில் அடைக்கப்பட்டார்.

தனியாக இவரை நெருங்க சிரை ஊழியர்கள் அச்சம் தெரிவித்ததை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தினசரி ஒரு மணி நேரம் மட்டும் தமது அறையில் இருந்து அவர் வெளியே அனுப்பப்பட்டார், அதுவும் 6 பொலிசார் அவருக்கு காவல் காத்தனர்.

45 ஆண்டுகள் தனிமைச் சிறை... வரலாறு படைத்த பிரிட்டன் கொலைகாரன் | Solitary Confinement British Killer World Record

லிவர்பூல் பகுதியில் பிறந்த Maudsley 1974ல் காவல் நிலையம் சென்று ஒருவரை கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக்கொண்டார். ஆனால் மருத்துவ சோதனையில், அவர் விசாரணையை எதிர்கொள்ள தகுதியான மன நிலையில் இல்லை என கண்டறிந்து, உளவியல் காப்பகம் ஒன்றில் தங்க வைத்தனர்.

ஆனால் அங்கே இன்னொருவருடன் இணைந்து மூன்றாவது நபரை சித்திரவதை செய்து இறப்புக்கு காரணமானார். கொலை வழக்கு தொடர்பில் சிறை தண்டனை அனுபவித்து வந்தவர் தம்முடன் இருந்த இருவரை கொலை செய்ததுடன் மேலும் 6 பேர்கள் இவரின் கொலை முயற்சியில் இருந்து தப்பினர். அதன் பின்னர் Robert Maudsley கடந்த 45 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் இருந்து வருகிறார்.