ரஷ்யாவுக்கு போக வேண்டாம்… தடுத்த குடும்பத்தினருக்கு வந்த கண்ணீர் தகவல்

0
288

தான்சானியா நாட்டவர் ஒருவர் ரஷ்யா ஆதரவாக உக்ரைனில் போரிட முடிவு செய்ததை மொத்த குடும்பமும் எதிர்த்த நிலையில், தற்போது அவர் தொடர்பில் கண்ணீர் தகவல் ஒன்று அந்த குடும்பத்திற்கு கிடைத்துள்ளது.

தான்சானியரான Nemes Tarimo ரஷ்யாவின் வாக்னர் படையுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்டு தற்போது களத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 வயதான Nemes Tarimo பெருந்தொகைக்கு ஆசைப்பட்டு தற்போது உக்ரைனில் பலியாகியுள்ளார். சம்பவம் நடந்து 3 வாரங்கள் கடந்த நிலையில் இன்னமும் Nemes Tarimo குடும்பம் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எனவும் அவரது சடலம் குடும்பத்தாருக்கு ஒப்படைக்கப்படுவதையும் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறுகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் வாக்னர் படையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் உக்ரைன் செல்ல இருப்பதாகவும் Nemes Tarimo தமது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் குடும்ப உறுப்பினர்கள் பலர் இந்த முடிவை கடுமையாக எதிர்த்ததாகவும் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். உண்மையில் Nemes Tarimo கடவுள் நம்பிக்கை கொண்டவர் எனவும் கண்ணியமானவர் எனவும் குடும்பத்திற்காக உழைப்பவர் எனவும் அதனால் தான் பெருந்தொகைக்கு ஆசைப்பட்டு அவர் வாக்னர் படையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.