யாழில் இடம்பெறவிருந்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

0
35

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை உறுதிப்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா வெளியிட்டுள்ளார்.

இந்த கனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருந்த நிலையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.