தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் ரிஷி சுனக்!

0
386

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) தனது அதிகாரப்பூர்வ காரில் சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பில் பொலிஸார் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீட்பெல்ட் அணியாமல் காரின் பின்புறத்தில் பிரதமர் சுனக்(Rishi Sunak) இருப்பது போல் இப்போது நீக்கப்பட்டுள்ள காணொளியில் தோன்றியதை அடுத்து பிழையை பிரதமர் ஒப்புக்கொண்டார்.

இது குறித்து தங்களுக்குத் தெரியும் என்றும் விசாரணை நடத்தி வருவதாகவும் லங்காஷயர் பொலிஸார் தெரிவித்தனர். சில விதிவிலக்குகளைத் தவிர்த்து கார் பயன்படுத்துபவர்கள் இருக்கையில் ஒருவர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் ரிஷி சுனக்; என்ன செய்தார் தெரியுமா! | Prime Minister Rishi Sunak Realized Mistake

அதன்படி சீட் பெல்ட் அணியவில்லை என்றால் 500 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும். இது குறித்து டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில் ஒரு சிறிய காணொளியை படமாக்க பிரதமர் தனது சீட் பெல்ட்டை கழற்றினார்.

இது தவறு என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டு பிரதமர் மன்னிப்பு கோரியுள்ளார் என செய்தித் தொடர்பாளர் கூறினார். அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பிரதமர் நம்புகிறார் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.