அரசியல் வரலாற்றில் ரணிலின் சாதனையை முறியடித்த ஜீவன் தொண்டமான்…

0
76

அமைச்சரவை அந்தஸ்துள்ள நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளம் அரசியல்வாதி என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஜீவன் தொண்டமான், இதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை முறியடித்துள்ளார்.

29 வயதில் அமைச்சராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க

இலங்கை அமைச்சரவையில் இளம் வயது அமைச்சராக 1977 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கத்தில் பதவிப்பிரமாணம் செய்து, ரணில் விக்ரமசிங்க, இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்ற இளம் அரசியல்வாதி என்ற வகையில் வரலாற்றில் இடம்பிடித்தார்.

ரணில் விக்ரமசிங்க தனது 29 வது வயதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவியேற்றார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ரணிலின் சாதனையை முறியடித்த ஜீவன் தொண்டமான் | Thondaman Broke Ranil Wickramasinghe S Record

28 வயதில் அமைச்சராக பதவியேற்றுள்ள ஜீவன் தொண்டமான்

எனினும் ஜீவன் தொண்டமான் 28 வது வயதில் நேற்று அமைச்சரவை அந்தஸ்துள்ள நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து, ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.