வெறும் தக்காளி கெட்ச்அப் தான் உணவு: பல வாரங்கள் நடுக்கடலில் தத்தளித்த நபர்!

0
32

டொமினிக்கன் குடியரசு நாட்டை சேர்ந்த ஒருவர் நடுக்கடலில் சிக்கி வெறும் தக்களி கெட்ச்அப் மட்டுமே சாப்பிட்டு மூன்று வாரங்கள் உயிர் தப்பியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகை பழுது பார்த்துக் கொண்டிருந்தார் 54 வயதான எல்விஸ் ஃபிராங்கோயிஸ். இந்த நிலையில் திடீரென்று எழுந்த பேரலை, காலநிலை மாற்றம் காரணமாக அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் அந்த படகில் உணவுப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் பழுதான படகுடன் வெறும் தக்காளி கெட்ச்அப் சாப்பிட்டு 24 நாட்கள் கடலில் தத்தளித்துள்ளார்.

மட்டுமின்றி மழை நீரை சேகரித்து குடிக்கவும் பயன்படுத்தியுள்ளார். தக்காளி கெட்ச்அப் மற்றும் பூண்டு தூள் மட்டுமே படகில் எஞ்சியிருந்ததாகவும் அதை தண்ணீரில் கலந்து உணவாக உட்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த பகுதியில் கடந்து சென்ற கப்பல்களிடம் இருந்து உதவி தேடவும் முடியாமல் போனது என்றார். இந்த நிலையில், தம்மிடம் இருந்த கண்ணாடி ஒன்றால் தலைக்கு மேலே கடந்து சென்ற விமானத்திடம் சமிக்ஞை காட்டியதாகவும், அவர்களின் தயவால் தான் தாம் உயிருடன் தற்போது இருப்பதாகவும் எல்விஸ் தெரிவித்துள்ளார்.

அந்த விமானத்தின் விமானி உடனடியாக கடலோர காவலுக்கு தகவல் தெரிவிக்கவும் அவர்கள் வந்து மீட்டதாக எல்விஸ் குறிப்பிட்டுள்ளார். 24 நாட்கள் கண்ணுக்கு எட்டிய தொலைவில் தண்ணீர் பேசவும் யாரும் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்கே இருக்கிறோம் என்றும் தெரியவில்லை.

கடினமான தருணங்களாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நான் நம்பிக்கையை இழந்தேன். எனது குடும்பத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். அதுவே என்னை உயிர் வாழ தூண்டியது என்றார்.