பிக்பாஸ் சீசன் 6ல் நடிகர் கமல்ஹாசன் இத்தனை கோடி சம்பளமா?

0
34

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களின் வெற்றியை அடுத்து 6 சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 9 ம் திகதி பிரம்மாண்டமாக தொடங்கியது.

தற்போது இந்த நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் ஜெயிப்பாரா அல்லது விக்ரமன் ஜெயிப்பாரா என அனைவரும் ஆவலாக உள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 யில் நடிகர் கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? | Bigg Boss Actor Kamal Haasan Salary So Much Crores

பணமூட்டை டாஸ்க்கில் ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொண்டு கதிரவன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இரண்டாவது முறையாக பணப் பெட்டி வைக்கப்பட்டது. அதில் 13 லட்சம் பணத்துடன் அமுதவாணன் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதுவரை நடந்துமுடிந்த 5 சீசன்களில் ஒருவராவது வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டுக்குள் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இந்த சீசனில் மட்டும் வைல்ட் காட் என்ட்ரியாக யாரும் வரவில்லை.  

பிக்பாஸ் சீசன் 6 யில் நடிகர் கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? | Bigg Boss Actor Kamal Haasan Salary So Much Crores

இவ்வாறான நிலையில், நடிகர் கமல்ஹாசன் இந்த பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை மொத்தம் 15 வாரங்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.

ஒரு வாரம் கூடுதலாக இருக்கலாம். இந்த பிக்பாஸ் 6வது சீசனிற்காக கமல்ஹாசன் அவர்கள் ரூ. 75 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.