யாழில் ஆட்களற்ற வீட்டில் பதின்மவயது காதலியுடன் சிக்கிய இளைஞர் கைது !

0
173

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவில் பதின்ம வயது மாணவியை வன்புணர்விற்குட்படுத்திய 23 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரும் ஆட்களற்ற வீட்டில் தங்கியிருந்த நிலையில் பொலிசாரால் கண்டறியப்பட்டனர். 15 வயதான மாணவியை காணவில்லையென பெற்றோர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

யாழில் ஆட்களற்ற வீட்டில் பதின்மவயது காதலியுடன் சிக்கிய இளைஞர்! | Boy Arrest With A Teenage Girlfriend

 இளைஞர் விளக்கமறியலில்

இதனையடுத்து மறுநாள் காலையில் காணாமல் போன மாணவியும் காதலனும் ஆட்களற்ற வீடொன்றில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் அங்கு சென்று மாணவியை மீட்டனர்.

சிறுமி விருப்பத்துடன் காதலனுடன் சென்றிருந்தாலும் உரிய பராயமடையாததால் இளைஞனை பருத்தித்துறை நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளிற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூற்ப்படுகின்றது.