யாழில் வேலன் சுவாமிகள் கைது; பிரிட்டன் எம்.பி கண்டனம்!

0
40

யாழ்ப்பாணத்தில் இந்து சமய தலைவர் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டதற்கு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மைக்டொனாக் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, 2022 இல் இலங்கையில் அதிபர்கள் மாற்றப்பட்டதன் மூலம் நாட்டின் மனித உரிமைகள் பதிவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சமீபத்திய மதிப்பீட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

யாழில் வேலன் சுவாமிகள் கைது; பிரிட்டன் எம்.பி விடுத்த கடும் கண்டனம்! | Velan Swami Arrested In Yali Strongbritish Mp

இலங்கை அதிபரின் யாழ்ப்பாண விஜயத்தின் போது அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிவில் உரிமை செயற்பாட்டாளரும் இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்கிறேன்.

மேலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது மனிதனின் அடிப்படை உரிமை என அவர் பதிவிட்டுள்ளார்.