தெற்காசியாவின் பொருளாதார மையமாக மாறவுள்ள இலங்கை; துரித கதியில் நிறைவடையும் பணிகள்

0
74
Port City Colombo, a multi-services Special Economic Zone in Sri Lanka.

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வை வரியில்லா வலயத்திற்கான பணிகள் துரித கதியில் நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு நிலப்பரப்பில் தனித்துவமான மாற்றத்தைச் சேர்க்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் கொழும்பு துறைமுக நகரத்தின் முதலீட்டுத் திட்டங்கள், இலங்கையை தெற்காசியாவின் பொருளாதார மையமாக மாற்றும் இலக்கை எட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன வரியில்லா மற்றும் சிங்கப்பூர் வரியில்லா மண்டலங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சில்லறை வர்த்தகத்தில் இருந்தே 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.