எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; கதறும் இலங்கை நடிகை!

0
43
----- Bollywood actor Jacqueline Fernandez leaves after appearing before the Patiala House court in connection with a money laundering case, linked to alleged conman Sukesh Chandrashekhar, in the capital on Friday.------SNS----11--11--22.

எனது வாழ்க்கையை சுகேஷ் சந்திர சேகர் நரகமாக்கிவிட்டார் என இலங்கை நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

புதுடெல்லி இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் பிரபலமான சுகேஷ் சந்திரசேகர் மீது 15 மோசடி வழக்குகள் உள்ளன.

எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

200 கோடி மோசடி

சுகேஷ் சந்திர சேகர்  நடமாடும் தொனியைப் பார்த்து பெரும் கோடீஸ்வரர்கள்கூட ஏமாந்திருக்கிறார்கள்.

இரட்டை இலை சின்ன வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருக்கும்போது தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடியை சுகேஷ் மோசடி செய்துள்ளார்.

எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

இதுகுறித்து தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த குற்றப்பத்திரிகை சுகேஷ் இன் முகத்திரையை கிழித்து பல தகவல்களை புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. சுகேஷ் சந்திரசேகர் செய்த 200 கோடி மோசடி அவரை நாடு முழுவதும் பிரபலமாக்கி இருக்கிறது.

அதற்கு நடிகைகளுடனான அவரது பழக்கமும் ஒரு காரணம். மோசடி பணத்தில் சுகபோகம் மோசடி பணத்தில் சுகேஷ் சுகபோகமாக வாழ்ந்துள்ளார். இந்நிலையில் சுகேசுடன் நடிகை ஜாக்குலினை மிகவும் நம்பி பழகியுள்ளார்.

எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

ஜாக்குலினின் மேலாளருக்கு அவர் ரூ.8 லட்சம் மதிப்புள்ள ‘டுகாட்டி’ மோட்டார் சைக்கிளை பரிசாக கொடுத்ததாகவும் அமலாக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் மீது மோகம்

இளம் நடிகைகள் மற்றும் ‘மாடலிங்’ பெண்கள் மீது சுகேஷ் சந்திரசேகர் அதிக விருப்பம் கொண்டுள்ளார். அவர் விரும்பும் நடிகைகளை நயமாக பேசி, சுகேசிடம் வசமாக சிக்கவைப்பது பிங்கி இரானியின் வேலை என கூறப்படுகிறது.

எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

இப்படி சிக்கியவர்களில் பலர், வழக்கின் சாட்சிகளாக மாறிவிட்டனர். இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்  நீதிமன்றத்தில்  அளித்த வாக்குமூலத்தில்,

சுகேஷ் எனது உணர்ச்சிகளுடன் விளையாடி ‘எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என கூறி உள்ளார்.

அத்துடன் சுகேஷின் குற்றப் பின்னணி வெளியான பிறகுதான் அவனது உண்மையான முகம் தனக்குத் தெரியவந்தது என்று ஜாக்குலின் கூறினார்.

எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

பிங்கி இரானிக்கு அவரது பின்னணி பற்றி தெரியும், ஆனால் அவர் தன்னிடம் உண்மையை சொல்லவில்லை என்றும் அவர் கூறி உள்ளார்.

இதற்கிடையில், மற்றொரு நடிகையும் பாலிவுட் நடனக் கலைஞருமான நோரா பதேகியும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கையில், சுகேஷ் நான் அவரது காதலியாக மாறினால், எனது தொழில் வாழ்க்கைக்கு நிதியளிக்க முன்வந்ததாக கூறினார்.

அதுமட்டுமல்லாது சுகேஷின் மனைவி லீனா மரியா நடத்திய நிகழ்ச்சியில் நடனப் போட்டியில் நடுவராக இருந்ததற்காக எனக்கு ஐபோன் மற்றும் குஸ்ஸி பேக் பரிசாக வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.