எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ‘கறுப்பு வாரம்’ – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

0
37

நாட்டில் நிலவும் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ‘கறுப்பு வாரம்’ பிரகடனப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று நடைபெற்ற சங்கத்தின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பிலும் எதிர்ப்பு இயக்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்தார்.