வேலைக்காக தினமும் 1300 கிலோமீற்றர் பயணம் செய்யும் பெண்!

0
358

கியூசெப்பினா கியுலியானோ(Giuseppina Giuliano)என்ற பெண் தனது தொழில் நிமித்தம் தினமும் 1300 கிலோமீற்றர் பயணம் செய்கிறார்.

கியூசெப்பினா(Giuseppina Giuliano) ஒரு நாளைக்கு ரயிலில் ஒன்பது மணிநேரம் பயணம் செய்வதாக தெரிவிக்கிறார். நேபிள்ஸில் வசிக்கும் அவர் அங்கிருந்து ரயிலில் பயணம் செய்து மிலனில் இருக்கும் அலுவலகம் ஒன்றில் பணிக்கு செல்ல வேண்டும்.

மிலனில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்குவதை விட இது இலகுவாகவும், பணத்தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேபிள்ஸ் சென்ட்ரல் ஸ்டேசனில் 5.09 மணிக்கும் புறப்படும் ரயிலில் பயணம் செய்ய வேண்டும். காலை 10.30 மணிக்கு அவருடைய அலுவலக பணி தொடங்கும்.

பின்னர் 5 மணிக்கு பணிகளை முடித்து விட்டு மீண்டும் ரயிலில் தனது பயணத்தை தொடங்கி இரவு 10.53 மணிக்கு வீட்டிற்கு வருவாராம்.

இதுவே தனக்கு சிறந்த தீர்வு எனத் தெரிவிக்கும் கியூசெப்பினா மிலனில் அறையொன்றை வாடகைக்கு எடுத்தால் சுமார் 600 யூரோக்களை செலவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இது அவருடைய மாத வருமானமான 1165 யூரோக்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நேபிள்ஸில் வசிப்பதால் மாதத்திற்கு சுமார் 400 யூரோக்களை செலவிடுவதாகவும், இது அவருடைய குடும்பத்தினருடன் வாழ்வதற்கு போதுமானதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.