மகிந்தவை விட்டு வெளியேறி சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த ‘முட்டாள் பிசாசு’

0
56

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய உதித லொக்குபண்டார சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் பிணைத் தொகையை வைப்பிலிடுவதற்காக அவர் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.

முட்டாள் பிசாசு

மகிந்த ராஜபக்சவின் இதயம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பதாகவும் அவர் அந்தக் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

சில காலங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச, உதித் லொகு பண்டாரவை ‘முட்டாள் பிசாசு’ என்று பகிரங்கமாக அழைத்தது அப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.