யாழ்.பேருந்தில் பெண்களுடன் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட காவாலிகள்; நேர்ந்த நிலை!

0
74

யாழிலிருந்து சாவகச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தில் நேற்றைய தினம் போதையில் ஏறிய 3 காவாலிகள் பயணித்த பெண்களுடன் பயணிகள் பார்க்கத்தக்கதாகவே அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கடும் அச்சமடைந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் கூக்குரல் இட்டு கத்தியுள்ளனர். இந் நிலையில் சாரதி மற்றும் நடத்துனர் பேருந்தை நிறுத்தி விட்டு அவர்களை கீழே இறக்க முற்பட்ட போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரையும் 3 காவாலிகள் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தாக்கிக் கொண்டிருந்தவர்களிடம் தப்பித்து ஓடிய சாரதி நாவற்குழி யாழ் வளைவு அருகில் நின்றிருந்த இராணுவ சிப்பாய்களிடம் முறையிட்ட போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்காது பொலிசாரிடம் முறையிடும்படி கூறியதாகத் தெரியவருகின்றது.

இந் நிலையில் அந்த 3 காவாலிகளும் அப்பகுதியால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் ஆட்டோ, அரச பேரூந்து போன்றவற்றையும் மறித்து தாக்கியதாகத் தெரியவருகின்றது.

இதனால் அப்பகுதி பெரும் அல்லோலகப்பட்டுக் கொண்டிருந்தது. இந் நிலையில் அந்த வீதியால் கிரிகெட் விளையாடி விட்டு வந்த இளைஞர்கள் சிலர் இவர்களின் அட்டகாசத்தை பார்த்து கொதித்துள்ளனர்.

யாழில் பேருந்தில் பெண்களுடன் பாலியல் சேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்த நிலை! | Sexual Pranks With Women On The Bus In Yali

அதன் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. கிரிகெட் விளையாடிவிட்டு வந்த இளைஞர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் கூடி தாக்கிக் கொண்டிருந்த காவாலிகளை துரத்தித் துரத்திப் பிடித்தனர்.

அதன் பின்னர் கும்பிடக் கும்பிட நையப்புடைக்கப்பட்டார்கள் குறித்த காவாலிகளை .பொலிசாரிம் ஒப்படைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தகது.