ஆப்கானிஸ்தான் பல நூறு பேர் கண் முன்னே நால்வரின் கைகளை வெட்டி தண்டனை

0
51

காந்தஹாரில் உள்ள அகமது ஷாஹி ஸ்டேடியத்தில் பல நூறு பேர் கண் முன்னே திருட்டு மற்றும் தன்பாலின ஈர்ப்பு குற்றத்திற்காக 9 பேர்களுக்கு தண்டனை அளித்துள்ளது தாலிபான் நிர்வாகம்.

ஆப்கானிஸ்தான் உச்ச நீதிபன்றத்தின் அறிவுறுத்தலின்படியே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருட்டு மற்றும் தான்பாலின ஈர்ப்பு குற்றத்திற்காக ஒவ்வொருவருக்கும் தலா 35 முதல் 39 முறை கசையடி வழங்கப்பட்டுள்ளது.

பல நூறு பேர் கண் முன்னே நால்வரின் கைகளை வெட்டி தண்டனை: அதிரவைத்த சம்பவம் | Theft Charges Taliban Publicly Cut Off Hands

மட்டுமின்றி, நால்வருக்கு கைகளை வெட்டியும் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவங்களின் போது நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் கால்பந்து மைதானத்தில் பார்வையாளர்களாக திரண்டிருந்தனர்.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு மற்றும் கண்டனங்கள் இருந்தபோதிலும், தாலிபான்கள் மீண்டும் கசையடி மற்றும் குற்றவாளிகளை பகிரங்கமாக தூக்கிலிடவும் தொடங்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பொது மரணதண்டனை மற்றும் கசையடி மீண்டும் தொடங்கியுள்ளது ஐ.நா நிபுணர்களை ஆழ்ந்த வருத்தத்தில் தள்ளியுள்ளது. மேலும் அனைத்து வகையான கடுமையான, கொடூரமான மற்றும் இரக்கமற்ற தண்டனைகளை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.