யாழில் வெற்றிலை சாப்பிட்டபடி கடமையில் ஈடுபட்ட பொலிஸ அதிகாரி பணி நீக்கம்

0
47

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய நுழைவாயிலில் வெற்றிலை சப்பியபடி கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் வெற்றிலை சப்பியபடி கடமையில் ஈடுபட்ட பொலிஸ அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை | Police Officer Duty After Betel Leaves Jaffna

யாழ். பொலிஸ் நிலைய நுழைவாயிலில் இன்றைய தினம் (17-01-2023) காலை கடமையில் ஈடுபட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாயில் வெற்றிலை சப்பிடியபடி பொலிஸ் நிலையத்திற்கு வருபவர்களுடன் அடாவடித்தனமாக செயற்பட்டுள்ளார்.

இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடியாக தெரிவித்ததன் அடிப்படையில் வெற்றிலை சப்பிய படி கடமையில் ஈடுபட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரை கடமையில் இருந்து அகற்றி உடனடியாக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலைய நிர்வாக அதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.