அந்தரத்தில் தடுமாறிய 72 பேர் பயணித்த விமானம்! பல உயிரை காவு வாங்கிய கடைசி நிமிட வீடியோ

0
39

நேபாளத்தின் பொகாராவில் 72 பேர் பயணித்த விமானம் தீப்பற்றி எரியும் முன் தடுமாறிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

 தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

இந்த விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்ததாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசி நிமிட வீடியோ

இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். காட்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதாக தெரிகிறது.

விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, இந்த நிலையில் விமானமானது தரையிறங்குவதற்கு முன்னர் தடுமாறிய நிலையில் பறந்த கடைசி நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.