அதிபர் புடினுக்கு எதிராக திரும்பும் ரஷ்ய வீரர்கள்!

0
56

உக்ரைனில் உறையும் குளிரால் அவதிப்படும் ரஷ்யப் படைகளும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதால், அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக ராணுவம் திரும்பக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

உக்ரைனில் சிக்கியுள்ள ரஷ்ய வீரர் ஒருவர் பதிவு செய்துள்ள காணொளியில், கடும் குளிரை எதிர்கொள்வதாகவும், உணவு அல்லது மருத்துவ உதவி போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது -25C என குறிப்பிட்டுள்ள அந்த வீரர், இந்த சூழலில் நாங்கள் தங்க வேண்டியிருக்கிறது என்றார். மேலும், இந்த கட்டத்திலும் எங்களின் தலைமை எங்களை மிரட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி புடினுக்கு எதிராக திரும்பும் ரஷ்ய ராணுவத்தினர்! | Russian Soldiers Turning Against President Putin

இந்த பகுதியில் இருந்து நகர்ந்து முன்னேறாதவரையில் உணவு அல்லது மருத்துவ உதவிகளை நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

தாங்கள் பதிவு செய்துள்ள இந்த காணொளி ஜனாதிபதி புடின்(Vladimir Putin) பார்வைக்கு செல்ல வேண்டும் எனவும், அதற்கு ஒரு சட்டத்தரணி எங்கள் சார்பில் வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

இதுபோன்ற இரக்கமற்ற நடவடிக்கை ராணுவத்தின் மன வலிமையை சிதைக்கும் எனவும், வீரர்கள் கடும் குளிரில் சிக்கி நோய்வாய்ப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.