பசுவுடன் தகாத உறவு வைத்த 19 வயது இளைஞன்!

0
48

காணியில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுவுடன் பாலியல் உறவு வைகைப்பட்ட 19 வயது இளைஞன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த இளைஞநை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் மகேஷ் ஹேரத் உத்தரவிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் வீரகுல, இஹல வீடியவத்த பகுதியில் உள்ள காணியில் கட்டிவைக்கப்பட்டிருந்த பசுவுடன் குறித்த இளைஞர் பாலியல் உறவு கொண்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீரகுல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த காணி உரிமையாளரிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

பசுவுடன் தகாத உறவு வைத்த இளைஞன் | Young Man Inappropriate Relationship With A Cow

ராகம போதனா வைத்தியசாலையில் உள்ள மனநல வைத்தியரிடம் சந்தேக நபரை முன்னிலைப்படுத்தி மருத்துவ அறிக்கையுடன் ஜனவரி 23 ஆம் திகதி மன்றில் முன்னிலைபடுத்துமாறு மஹர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.