இந்திய வம்சாவளி அமெரிக்கர்களை பாராட்டிய அமெரிக்க எம்.பி!

0
66

அமெரிக்க நாட்டின் சட்ட திட்டங்களை இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் முறையாக பின்பற்றுவதாக அமெரிக்க எம்.பி. மெக்கார்மிக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மெக்கார்மிக் எம்.பி., அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களை வெகுவாக பாராட்டினார்.

அமெரிக்க மக்கள் தொகையில் 1 சதவீதம் இருக்கும் இந்திய அமெரிக்கர்கள், அந்நாட்டின் 6 சதவீத வரியை முறையாக செலுத்துவதாக மெக்கார்மிக் எம்.பி. புகழாரம் சூட்டினார்.

இந்திய அமெரிக்கர்கள் சட்ட திட்டங்களை முறையாக பின்பற்றுவதாகவும், பிரச்சினைகளை ஏற்படுத்துவதில்லை என்றும் தெரிவித்த அவர், இந்திய அமெரிக்கர்கள் சிறந்த தேசபக்தர்கள், சிறந்து குடிமக்கள் மற்றும் நல்ல நண்பர்கள் என்று கூறினார்.

இந்திய வம்சாவளி அமெரிக்கர்களை பாராட்டிய அமெரிக்க எம்.பி! | American Mp Praised The Indian Americans Tax Paye