கொழும்பு தாமரை கோபுரத்திற்கு வருபவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்…

0
58

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வரும் பொது மக்கள் அதனை சேதப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்களில் சிலர் சொத்துக்களுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தாமரை கோபுரத்தை பராமரிப்பதற்கு அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த பலர் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கொழும்பு தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்தின் வர்த்தக நிறைவேற்று அதிகாரி பிம்சர ரொசைரோ தெரிவித்துள்ளார்.