15 ஆண்டுகளாக வரி மோசடியில் ஈடுபட்ட டொனால்ட் டிரம்ப்!

0
59
FILE PHOTO: Former U.S. President Donald Trump speaks during a rally in Commerce, Georgia, U.S. March 26, 2022. REUTERS/Alyssa Pointer/File Photo

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனம் 15 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்தது அம்பலமானது.

கடந்த மாதம் மன்ஹாட்டனில் உள்ள நீதிபதிகள் 17 கிரிமினல் குற்றச்சாட்டுகளில் டிரம்ப் அமைப்பின் இரண்டு துணை நிறுவனங்களைக் குற்றவாளிகளாகக் கண்டறிந்தனர்.

நீண்ட 15 ஆண்டுகள் வரி மோசடியில் ஈடுபட்ட டொனால்ட் டிரம்ப் | Trump S Company Sentenced For Tax Fraud

மேலும், ட்ரம்ப் குடும்பத்து நிறுவனங்களில் சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றியுள்ள முன்னாள் தலைமை நிதி அதிகாரி ஒருவருக்கு ஐந்து மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே தற்போது குறித்த தீர்ப்பும் வெளியாகியுள்ளது. ட்ரம்ப் நிறுவனமானது 1.6 மில்லியன் டொலர் அபராதம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ட்ரம்ப் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மேலும், இந்த வழக்கில் ஒருவர் மீதும் குற்றஞ்சாட்டப்படவில்லை மட்டுமின்றி எவருக்கும் சிறை தண்டனையும் விதிக்கப்படவில்லை.

இந்த வழக்கானது வெறும் பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமே என ட்ரம்ப் கூறி வந்துள்ளார். மேலும், அரசு முதன்மை சட்டத்தரணி லெட்டிடியா ஜேம்ஸ் தொடுத்துள்ள 250 மில்லியன் டொலர் சிவில் வழக்கையும் ட்ரம்ப் குடும்பம் எதிர்கொள்கிறது.