இலங்கை இராணுவத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க தீர்மானம்!

0
114

கடந்த ஒரு வருட காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் ராணுவத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி பிரேமித பண்டார தென்னகோன் கூறியதாவது,

இலங்கை ராணுவத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடிவு! | Decision Reduce The Sri Lankan Army By One Third

இலங்கையின் ராணுவ பலம் தற்போது 200,783 ஆக உள்ளது. இதை மூன்றில் ஒரு பங்காக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் ராணுவ பலத்தை 1,35,000 ஆகவும், 2030க்குள் 1,00,000 ஆகவும் குறைக்கப்படும்.

வரவிருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் 2030ஆம் ஆண்டிற்குள் தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் கூறியுள்ளார்.