ஆசிரியை தனிமையாக இருப்பதைத் தெரிந்து மாணவன் செய்த பயங்கர செயல்

0
193

ஜேர்மனியில், தன் ஆசிரியை தனிமையாக இருப்பதைத் தெரிந்துகொண்ட 17 வயது மாணவர் ஒருவர், அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

கத்தியால் குத்தப்பட்ட ஆசிரியை

நேற்று, வடமேற்கு ஜேர்மனியிலுள்ள Ibbenbüren நகரில், மாணவர் ஒருவர் பொலிசாரை அழைத்து தான் ஆசிரியை ஒருவரைக் கொலை செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

உடனடியாக பொலிசார் அங்கு விரைய, எந்த எதிர்ப்பும் காட்டாமல் சரணடைந்துள்ளார் அந்த மாணவர்.

தொழிற்பயிசிப் பள்ளியில் கல்வி கற்பித்துவந்த அந்த 55 வயது ஆசிரியை தனிமையாக இருப்பதை எப்படியோ அறிந்துகொண்ட அந்த மாணவர், அவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்.

கொலைக்கான காரணம்

கொலைக்கான காரணம் உறுதி செய்யப்படாத நிலையில், அந்த மாணவர் பிரச்சினை செய்யும் மாணவர் என்றும், ஆகவே, அவர் நேற்று வகுப்புக்களிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தான் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், அந்த ஆசிரியை தனிமையாக இருப்பதை அறிந்துகொண்ட அந்த மாணவர், ஆசிரியைக் கத்தியால் குத்தியதாக கருதப்படுகிறது.

இன்று அந்த மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.