வன்னியின் சாம்பியனான புனித லூசியா வி.க பள்ளிமுனை அணி!

0
348

2023

வன்னி உதைபந்தாட்டச்சமர் கிண்ணம் மன்னார் பள்ளிமுனை புனித லூசியா வி.க வசமானது. மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 24 கழகங்கள் உறவுகளாக மோதிக்கொள்ளும் உதைப்பந்தாட்ட சமர்- தாயக விருட்சம் சுவிஸ் மற்றும் மன்னார் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து மன்னார் மண்ணில் நடாத்தப்படும் அணிக்கு 11 பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ROUND OF – 16 போட்டியில் சஞ்சய் இன் கோலின் உதவியுடன் பள்ளிமுனை புனித லூசியா வி.க 1 – 0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய வி.க விடத்தல்தீவு (மன்னார்)
அணியை வெற்றி பெற்றது.

காலிறுதி போட்டியில் றெபேக்சன் இன் கோலின் உதவியுடன் பள்ளிமுனை புனித லூசியா வி.க 1 – 0 என்ற கோல் கணக்கில் புனித சூசையப்பர் வி.க பனங்கட்டுகொட்டு மன்னார் அணியை வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

அரையிறுதி போட்டியில் பள்ளிமுனை புனித லூசியா வி.க எதிர் மெசியா வி.க வலைப்பாடு அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவுற்று சமநிலை தவிர்ப்பு உதையில் 4 – 3 கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

மாபெரும் இறுதி போட்டியில் றெபேக்சன் , நிலுக்சன் இன் கோலின் உதவியுடன் மன்னார் புனித லூசியா வி.க பள்ளிமுனை அணி முல்லைத்தீவு புனித யூட் வி.க அணியை 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வன்னியின் சாம்பியனாக மீண்டும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளனர்.)

சிறந்த வீரன் – றெபேக்சன் (மன்னார் புனித லூசியா வி.க பள்ளிமுனை)

சிறந்த கோல் காப்பாளர் – சதுசியன் (மன்னார் புனித லூசியா வி.க பள்ளிமுனை)

தொடராட்ட நாயகன் – சாந்த குமார் [ புனித யூட் வி.க முல்லைத்தீவு]

நன்நடத்தை அணி – உதய சூரியன் வி.க

3ம் இடம் – உதய சூரியன் வி.க (வட்டுவாக்கால்)

4ம் இடம் – மெசியா வி.க (வலைப்பாடு)