இலங்கையின் உச்சி திறப்பு விழா; திறந்துவைத்த அமைச்சர் டக்ளஸ்!(Photos)

0
329

இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ”பனை முனை கல்வெட்டு திறப்பு விழா” பருத்தித்துறை – பனைமுனை பகுதியில் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இதுவரை காலமும் இலங்கையின் தலைப்பகுதியாக பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் தேசிய கொடி பொறிக்கப்பட்ட கட்டுமானம் கருதப்பட்டது.

எனினும் அது உண்மையில் தெற்கே தெய்வேந்திரமுனையை நேரே இணைக்கும் முனை அல்ல என கூறப்படுகின்றது.

இடம்மாறிய இலங்கையின் உச்சி; திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!(Photos) | Sri Lanka S Top Displaced Minister Douglas Opened

இந்நிலையில் , வரலாற்று ரீதியாகவும் பண்டைய வரைபடங்களில் குறிக்கப்பட்டுள்ளவாறும் உண்மையான இலங்கையின் தலைப்பகுதி(முனை) பருத்தித்துறை ஒரு பனை முனை அடையாள கல்வெட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

இடம்மாறிய இலங்கையின் உச்சி; திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!(Photos) | Sri Lanka S Top Displaced Minister Douglas Opened

அதேவேளை சக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முனையானது போர்காலத்தில் வரலாற்று குறிப்புகள், பண்டைய வரைபடங்கள் கணக்கில் எடுக்காமல் பாதுகாப்பு தரப்பால் அமைக்கப்பட்டதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.  