கனடாவில் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்ற 87 வயதான இலங்கைப் வம்சாவளி மூதாட்டி

0
352

கனடாவில் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்று 87 வயதான இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் அசத்தியுள்ளார்.

கனடாவில் வசித்து வரும் இலங்கையை வம்சாவளியாக கொண்ட தமிழ்ப் பெண்ணான வரதா சண்முகநாதன் (87) யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) தனது 2வது முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார்.

இதற்காக, ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்திற்கு வரதா சண்முகநாதன் நேரில் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தினர்.

கனடாவில் ஆச்சரியப்பட வைத்த இலங்கை வம்சாவளி தமிழ் மூதாட்டி! | Sri Lankan Tamil Woman Graduated From Canada

ஒன்ராறியோவிலுள்ள பல்கலைக்கழகத்தில் மூத்த முதுகலை பட்டதாரி ஆன வரதா சண்முகநாதனின் பட்டம், இலங்கையில் உள்நாட்டுப் போர் மற்றும் அமைதிக்கான முயற்சிகளை மையமாகக் கொண்டது.

இலங்கையில், யாழில் வேலணை என்ற சிறிய கிராமத்தில் பிறந்த வரதா சண்முகநாதன், இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் தொடர்பான பதில்களையும் விளக்கங்களையும் தேடுவதைக் கண்டார்.

ஒன்ராறியோ மாநில நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் (Vijay Thanigasalam) வரதாவின் சாதனைகளை எடுத்துக்கூறி சிறப்புரையும் நிகழ்த்தினார்.

கனடாவில் ஆச்சரியப்பட வைத்த இலங்கை வம்சாவளி தமிழ் மூதாட்டி! | Sri Lankan Tamil Woman Graduated From Canada

வரதாவின் முதல் முதுகலை பட்டம் இதுவல்ல. இந்தியாவில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் (University of Madras) இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, இந்திய வரலாறு மற்றும் ஆங்கிலத்தை கற்பிப்பதற்காக இலங்கை திரும்பினார்.

1990-ஆம் ஆண்டில், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்பிக்க லண்டனுக்குச் சென்றார், மேலும் லண்டன் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு மொழியியலில் தனது முதல் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.

கனடாவில் ஆச்சரியப்பட வைத்த இலங்கை வம்சாவளி தமிழ் மூதாட்டி! | Sri Lankan Tamil Woman Graduated From Canada

பின்னர், யோர்க் பல்கலைக்கழகத்தின் ஷூலிச் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் MBA பட்டம் பெற்ற தனது மகளுடன் இருக்க வராதா சண்முகநாதன் 2004-ல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.

இதன் விளைவாக, தனது மகளின் ஊக்கத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் முதுகலை பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.

அவர் 2019-ல் தனது படிப்பைத் தொடங்கிய அவர் நவம்பர் 2 அன்று 4,000 மாணவர்களுடன் தனது இரண்டாவது முதுகலைப் பட்டத்தை பெற்றார்.