மன்னார் மாவட்டத்தில் மோப்ப நாய்களுடன் சுற்றி திரிந்த பொலிஸார்…

0
370

மன்னார் மாவட்டத்தில் வைத்தியசாலைகள், பாடசாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் போதைப்பொருள் தேடும் சோதனை நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்தனர்.

வட மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய இந்நடவடிக்கை நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

மோப்ப நாய்களுடன் வேட்டையில் இறங்கிய பொலிஸார்!(Photos) | The Police Went On A Hunt With Sniffer Dogs Drugs

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயதிலக தலைமையில் நேற்று அதிகாலை தொடக்கம் வீதிகள், பாடசாலைகள், பொது இடங்களில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலை சூழலில் போதைப்பொருள் பாவனை

குறிப்பாக, பாடசாலை சூழலில் போதைப்பொருள் பாவனை அறிகுறிகள் காணப்படுகிறதா என்பது தொடர்பிலும் மோப்ப நாய்களின் உதவியுடன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அனைத்து பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களிலும் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேவேளை நாட்டில் பாடசாலை மானவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.