வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கான முக்கிய அறிவிப்பு! தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்

0
248

வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இன்று (07.12.2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை சுகாதார சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்கள் பூரணமாக கொவிட் தடுப்பூசி செலுத்தியமைக்கான சான்றிதழை சமர்ப்பித்தல் உள்ளிட்ட விதிமுறைகள் தளர்த்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

கோவிட் கட்டுப்பாடுகள்

இதன் அடிப்படையில் உலகின் எந்வொரு நாட்டின் விமான நிலையம் அல்லது துறைமுகத்திலிருந்து வருகை தரும் நபர்கள் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் வெளிநாட்டு பயணி அல்லது சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டால் ஹோட்டல் அல்லது தனியார் வைத்தியசாலையில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் எனவும் அதற்கான செலவுகளை குறித்த வெளிநாட்டுப் பிரஜை அல்லது சுற்றுலா பயணி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.