பப்பாளி மரத்தை வெட்டிய தாய்! ‘உங்களுக்கு சாபம் கிடைக்கும்’ என்று கதறி கதறி அழுத சிறுவன்..(video)

0
235

கேரளாவில் தாய் தான் வளர்த்து வந்த பப்பாளி மரத்தை வெட்டியதற்காக சிறுவன் கதறி அழுதுள்ள சம்பவம் காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

மரத்தை வெட்டிய தாய்

கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தான் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய போது தனது வீட்டில் இருந்த பப்பாளி மரம் வெட்டப்பட்டுள்ளதை அவதானித்து கதறியழுதுள்ளான்.

குறித்த மரத்தினை சிறுவனின் தாய் வெட்டி வீழ்த்தியுள்ள நிலையில், இதனை அவதானித்த சிறுவன் பள்ளி சீருடையை மாற்றாமல் அப்படியே அமர்ந்துவிட்டு, கதறி அழுததோடு, உங்களுக்கு சாபம் கிடைக்கும் என்று கதறி அழுதுள்ளார்.

பின்பு சிறுவனின் பாட்டி சமாதானப்படுத்த முயன்றும் சரியாகாத சிறுவன், தனது தாய் தவறை உணர்ந்து இந்த ஒரு மரத்தை வெட்டியதால், பத்து மரங்களை நடுவதாக சிறுவனுக்கு வாக்கு கொடுத்துள்ளார். இதனால் குறித்த சிறுவன் சற்று சமாதாமமாகியுள்ளான்.

source from manoramanews.com