துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 14 வயது சிறுமி!

0
178

14 வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் அநுராதபுரம் கல்னேவ ஹுரிகஸ்வெவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் அச்சிறுமியின் பெரிய தந்தையை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தமது மகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர்கள் ஹுரிகஸ்வெவ காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த காவல்நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் விசேட பணியக அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்தக் குற்றத்தை புரிந்ததாக கருதப்படும் 60 வயதான சந்தேக நபர் நேற்று (3) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் திருமண வாழ்க்கையிலிருந்து விலகியுள்ளதோடு நீண்ட நாட்களாக சிறுமியின் வீட்டில் தங்கியிருந்ததாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம்

குறித்த சிறுமியின் பெற்றோர் விவசாயத்திற்காக வீட்டிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பமொன்றில் சந்தேகநபரால் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சிறுமி சற்று உளநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை மருத்துவ பரிசோதனைக்காக அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (4) கெக்கிராவ மாவட்ட நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.