இன்றுடன் இரண்டாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் நிறைவு!

0
93

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதேசமயம் மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் 05 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளது.

முதற்கட்ட  பாடசாலை கல்வி நடவடிக்கைகள்

அதன்படி, அன்றைய தினம் முதல் எதிர்வரும் 22ம் திகதி வரை முதற்கட்டமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

அதன்பின்னர், டிசம்பர் 23ஆம் திகதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை நத்தார் பண்டிகைக்காக பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இன்றுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை! | Today Is A Holiday For Schools

மேலும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்காக, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு அம்மாதம் 20ஆம் திகதி நிறைவடையும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.