இத்தாலியின் தெற்கு தீவான இஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது இருவர் உயிரிழந்த நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், இத்தாலியின் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அவசரகால நிலையை அறிவித்தது.
சனிக்கிழமை அதிகாலையில் காஸாமிச்சியோலா டெர்ம் என்ற சிறிய நகரத்தைத் தாக்கிய மண் மற்றும் குப்பைகளின் அலை, குறைந்தது ஒரு வீடு மூழ்கியது. கார்கள் கடலுக்குள் இழுத்துச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அவசர சேவைகள் தெரிவித்தன.
அவசரகால நிலையை அறிவித்த அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் இரண்டு மில்லியன் யூரோ நிவாரண நிதியின் முதல் தவணை வெளியிடப்பட்டது என்று சிவில் பாதுகாப்பு அமைச்சர் நெல்லோ முசுமேசி கூறினார்.

200 க்கும் மேற்பட்ட மீட்பாளர்கள் இன்னும் காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர், அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏனையவர்கள் நகரத்தின் தெருக்களை சுத்தம் செய்வதில் மும்முரமாக உள்ளனர்.
இத்தாலிய செய்தி நிறுவனமான ஏஜிஐ படி, மீட்புப் படையினர் 31 வயது பெண்ணின் உடலை மீட்டுள்ளனர் ஏனையவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.