68 வயது முதியவருக்கு ஸ்கெட்ச் போட்ட தம்பதி! முதியவருடன் தனிமையில் மனைவி..வீடியோ எடுத்த கணவன் !

0
270

கணவன், மனைவி இருவரும் சேர்ந்து முதியவரை மிரட்டி பணம் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தம்பதி ஸ்கெட்ச்

கேரளா, திருச்சூரைச் சேர்ந்தவர் நிஷாத். இவர் மலப்புரத்தை சார்ந்த ராஷிதா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இருவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படுபவர்கள். திருமணத்துக்குப் பின்பு நிஷாத், ராஷிதா தம்பதியினர் ஆடம்பரமாக வாழ முடிவு செய்து வித விதமான வீடியோக்களை யூடியூபில் போட்டிருக்கின்றனர்.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவில் வீடியோக்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து, வலைதளங்களில் அந்தரங்க விஷயங்களை தேடும் வசதியான முதியவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளனர். அதன்படி மலப்புறம் கல்பாகம்சேரி பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் சிக்கியுள்ளார்.

சிக்கிய முதியவர்

முதியவரின் இன்பாக்ஸுக்குச் சென்று தன்னுடைய போட்டோக்களை அனுப்பி நெருங்கி பழகிய ராஷிதா கணவனின் ஆலோசனைப்படி அவரை ஆலுவாயில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்திருக்கிறார். அந்த வீட்டில் வைத்து முதியவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். அதை அவருடைய கணவர் நிஷாத் மறைந்து இருந்து கேமிரா மூலம் வீடியோ பதிவு செய்திருக்கிறார்.

அதன் பிறகு முதியவரிடம் இருந்து வீடியோக்களை வெளியிடுவதாக கூறி ராஷிதா மிரட்டி 23 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளார். அதில் கணவருடன் டூர் சென்று அதனை வீடியோவாக யூடியூபில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில், முதியவரின் வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாய் குறைந்துள்ளதையும்,

அவர் மேலும் பலரிடம் கடன் பெற்றுள்ளதையும் அறிந்த குடும்பத்தினர் விசாரித்ததில் முதியவர் நடந்தவற்றை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர். அதன்படி வழக்குப்பதிவு செய்து 6மாதங்களேயான இரு குழந்தைகள் இருப்பதால் ராஷிதாவுக்கு முன்ஞாமீன் வழங்கப்பட்டுள்ளது. கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.