யாழ்.கொக்குவில் பகுதியில் ஜன்னல் வழியாக தொலைபேசி மற்றும் பணம் திருட்டு

0
37

யாழ்.கொக்குவில் – கேணியடி பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றின் ஜன்னல் வழியாக தொலைபேசி மற்றும் பணம் ஆகியன திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குடியிருப்புக்கள் அதிகமான கேணியடி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த திருடன் வீட்டு ஜன்னலை திறந்து உள்ளே இருந்த பெறுமதியான தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளான்.

அடிக்கடி களவு

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதேவேளை கேணியடி பகுதியில் தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறான திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரியுள்ளனர்.