மும்பையில் தன் மகனுக்காக தன்னை அர்ப்பணித்த அன்புத் தந்தை!

0
350

இந்தியாவில் மும்பை நகரை சேர்ந்த யோகேஷ் வாஸ் மற்றும் மனைவி சுப்ரியா என்ற தம்பதிக்கு நிபீஷ் என்ற ஆண் குழந்தை உள்ளான்.

குறித்த சிறுவன் Progressive Familial Intrahepatic Cholestasis என்ற நோயால் பாதிக்கப்பட்டான். இந்த பாதிப்பு பிறக்கும் போதே அவருக்கு இருந்துள்ளது.

இது போன்ற நோய் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு பிறக்கும் போதே கல்லீரல் கோளாறு இருக்கும். மேலும் அவர்களுக்கு பிறக்கும் போதே மஞ்சள் காமாலை நோயும் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும். அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் குழந்தைக்கு கல்லீரல் செயலிழந்து போய்விடும் அபாயம் உள்ளது.

தனது மகனுக்காக தன்னையே அர்ப்பணித்த பாசத் தந்தை! | A Loving Father Who Devoted Himself To His Son

இது தொடர்பில் சிறுவனின் பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறிய நிலையில் சுப்ரியா தனது கல்லீரல் பகுதியை தானம் செய்ய முன் வந்தார். ஆனால் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதால் முடியாமல் போனது.

இதையடுத்து நிபீஷ் தந்தை யோகேஷ் தனது கல்லீரலை கொடுக்க சம்மதம் தெரிவித்ததால் அவரையும் சோதனை செய்தனர். நிபீஷ் தந்தைக்கு உடல் எடை அதிகமாக காணப்பட்டுள்ளது.

இதனால் அவரது உடல் எடையை குறைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன் பேரில் அவர் தொடர்ந்து டயட்டை பின்பற்றி வெறும் இரண்டு மாதத்திலேயே சுமார் 10 கிலோ வரை எடையை குறைத்துள்ளார்.

இதையடுத்து கடந்த அக்டோபர் 16-ம் திகதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது தந்தையும் குழந்தையும் நலமுடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.