நேற்றைய ஆட்டங்களின் போது நடந்த சுவாரஷ்யமான விஷயங்களின் தொகுப்பு இதோ கட்டாரில் உலக கிண்ட கால்பந்து போட்டி வெகு கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்றையதினம் மைதானத்தில் சில சுவாரஸ்ய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில் நேற்று, 4 முறை சம்பியனான ஜெர்மனி அணியும் ஜப்பான் அணியும் மோதின.

இதில் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஜெர்மனி வீரர்கள் அனைவரும் வாயை மூடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
FIFA அமைப்பு, ‘one love’ என்ற வாசகம் பொறித்த ஆர்ம் பேண்டை அணிந்து விளையாட தடை விதித்துள்ளது. இந்தத் தடை, எங்கள் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்ற கருத்தைப் பதிவு செய்வதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.

ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் இடையான இப்போட்டியின் முடிவில், 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் ஜப்பான் அணி,நான்கு முறை சம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணியை வீழ்த்தி கால்பந்து ரசிகர்களை வியப்படையச் செய்தது.

அதேவேளை ஆட்டம் முடிந்த பிறகு ஜப்பான் அணியின் ரசிகர்கள் சிலர், மைதானத்தில் உள்ள குப்பைகளை அகற்றினர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதேவேளை ஜப்பானிய ரசிகர்கள் மைதானத்தில் உள்ள குப்பைகளையும் பிளாஸ்டிக் பைகளையும் அகற்றும் வீடியோவை, உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் FIFA அமைப்பு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன் அவர்களின் செயலுக்கு பாராட்டையும் தெரிவித்துள்ளது.