சமையல் பாத்திரத்தை சுத்தம் செய்ய சொன்னதால் வேலையை ராஜினாமா செய்த மெக்டொனால்ட்ஸ் இளைஞன்!

0
84

சமையல் பாத்திரத்தை சுத்தம் செய்ய சொன்னதால் ‘மெக்டொனால்ட்ஸ்’ ஊழியர் லைவ் வீடியோவில் தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார்.

நியூசிலாந்தில் வெல்லிங்டன் நகரில் ‘மெக்டொனால்ட்ஸ்’ நிறுவனத்தின் உணவகம் உள்ளது. இங்கு பிலோன் மெக்காலம் என்ற இளைஞர் வேலை செய்துவந்தார்.

சமையல் பாத்திரத்தை சுத்தம் செய்ய சொன்னதால் வேலையை ராஜினாமா செய்த இளைஞன்! | Young Resigned From His Job Clean The Cooking Pot

இந்த நிலையில், மெக்காலம் இன்று வழக்கம் போல வேலைக்கு வந்துள்ளார். அப்போது, உணவகத்தில் உள்ள சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்யுமாறு மேலாளர் கூறியுள்ளார்.

பாத்திரங்கள் மிகவும் அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த மெக்காலம் உடனடியாக தனது மேலாளரிடம் சென்று தான் வேலையை இராஜினாமா செய்வதாக கூறினார்.

தான் ராஜினாமா செய்ததை மெக்காலம் காணொளியாக எடுத்து டிக்டாக் சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில், சுத்தம் செய்ய சமையலறையில் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களை பார்த்துவிட்டு நேரடியாக கடையின் மேலாளரிடம் சென்று, நான் இதை சுத்தம் செய்யமாட்டேன். நான் வேலையை விடுகிறேன்.. நான் வேலையை விடுகிறேன்… நான் வேலையை விடுகிறேன்… என்று 3 முறை கூறி கூச்சலிட்டுக்கொண்டு கடையில் இருந்து வெளியேறுகிறார்.

சமையல் பாத்திரத்தை சுத்தம் செய்ய சொன்னதால் வேலையை ராஜினாமா செய்த இளைஞன்! | Young Resigned From His Job Clean The Cooking Pot

அவரை சக ஊழியர்கள் தடுக்க முற்பட்டனர். ஆனால், மெக்காலம் அங்கிருந்து வேகமாக ஓடுகிறார். அந்த காணொளி தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.