யாழ்.வல்லை பாலத்தில் விழுந்து காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு!

0
88

யாழ்.வல்லை பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து காணாமல்போன இளைஞன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சம்பவத்திக்ல் புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயதான பாஸ்கரன் திலக்சன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கைகள் தங்கூசி வலையினால் பின்னப்பட்டிருப்பாதலும் முகத்தில் காயங்கள் இருப்பதாலும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னரே உயிரிழப்பிற்கான காரணம்தெரியவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் நேற்றுமாலை நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் தவறி விழுந்து காணாமல் போன நிலையில் மாலை முதல் அவரைத் தேடும் பணி இடம்பெற்றது.

யாழில் பெரும் சோகம்; மாயமான இளைஞன் சடலமாக மீட்பு!(Photos) | Mysterious Young Man Recovered As A Dead Body

இந்நிலையில் தவறிவிழுந்த இளைஞரைத் தேடும் பணியில் இரவு முழுவதும் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டபோதும் முயற்சி பலனளிக்காத நிலையில் கடற்படையினரின் முயற்சியில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

யாழில் பெரும் சோகம்; மாயமான இளைஞன் சடலமாக மீட்பு!(Photos) | Mysterious Young Man Recovered As A Dead Body