டுபாய் வங்கிகளில் ராஜபக்சர்களின் பணம் வைப்பு குறித்த சாட்சி எதுவுமில்லை – ரணில்

0
80

டுபாய் வங்கிகளில் ராஜபக்சர்களின் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை குறித்து சாட்சி எதுவுமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

டுபாய்க்கு சென்ற விசாரணைக்குழு

ராஜபக்சர்களின் டுபாய் பணம் பற்றி அறிந்து கொள்வதற்காக விசாரணைக்குழுவொன்றை அந்நாட்டுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார்.

டுபாய் வங்கிகளில் ராஜபக்சர்களின் பணம் வைப்பு..! ரணில் வெளியிட்ட தகவல் | Dubai Bank Money Deposit

எனினும், அவ்வாறு பணம் வைப்பிலிடப்பட்டமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்களின் ஒரு பில்லியன் டொலர் பணம் டுபாய் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதா என விசாரணை செய்யும் நோக்கில் ஜே.சீ.வெலியமுன, தில்ருக்ஸி டயஸ் மற்றும் ரவி வித்தியாலங்கார ஆகியோரைக் கொண்ட குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இந்த விசாரணை நடத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.