4 மாணவர்களின் புத்தகப் பையில் போதைப்பொருள்; கேகாலையில் சம்பவம்!

0
324

கேகாலை நகரப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 4 மாணவர்களிடம் போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுகாலை குறித்த மாணவர்கள் பாடசாலையின் பிரதான வாயிலால் பாடசாலைக்குள் செல்லாமல் வேலியால் புகுந்து பாடசாலைக்குள் சென்றுள்ளனர்.

மாணவர்களின் புத்தகப் பையில் போதைப்பொருள்

இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த பொலிஸார் மாணவர்களின் புத்தக பையை சோதனையிட்ட நிலையில் போதை மாத்திரைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களுக்கு போதை மாத்திரை விநியோகம் செய்த 21 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரபல பாடசாலைக்குள் நுழைந்த 4 மாணவர்கள்; சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி! | Drugs In School Student S Book Bag

 சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய பொலிஸார், ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் அவர்களது பாடசாலைப் பையை பரிசோதித்துள்ளனர்.

அப்போது ஒரு மாணவனின் பாடசாலைப் பையில் இருந்து 5 போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்களது பெற்றோர்கள் அழைக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணைகளின் மாணவர்கள் போதை வில்லைகளை உட்கொண்டமை தெரிய வந்துள்ளது.

பெற்றோர் அரச உத்தியோகஸ்தர்கள்

இந்நிலையில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த இளைஞனை கேகாலை நகரில் வைத்து பொலிஸாரினால் கைது செய்துள்ளனர். மேலும் கைதான சந்தேக நபரை கேகாலை மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்ய நடவடிக்கடைுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபல பாடசாலைக்குள் நுழைந்த 4 மாணவர்கள்; சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி! | Drugs In School Student S Book Bag

மேற்படி நான்கு மாணவர்களது பெற்றோர்களும் கல்வி கற்றவர்கள் என்றும், கேகாலை நகரில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.