மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்த காதலன்

0
40

பாடசாலை மாணவியை ஏமாற்றி காதலன் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இச் சம்பவம் குளியாப்பிட்டிய தென்னந்தோப்புக்குள் இடம் பெற்றுள்ளது.

காதலன் என்று கூறப்படும் அச் சந்தேக நபர் நேற்றுமுன்தினம் (20) கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆச் சிறுமியின் தாயார் கொடுத்த முறைப்பாட்டை தொடர்ந்து குளியாபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தென்னந்தோப்பில் காவலாளியாக பணிபுரியும் 33 வயதுடைய திருமணமானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகாதவர் எனத் தன்னைக் கூறிக் கொண்ட சந்தேகநபர், மாணவியுடன் காதல் தொடர்பு கொண்டுள்ளார்.

சந்தேக நபர், மாணவியை ஏமாற்றி குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த மாணவி இதற்கு முன்னர் வேறு ஒருவரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாகவும், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.