யாழில் மோப்ப நாயுடனான தேடுதலில் சிக்கிய மூவர்!

0
92

யாழ்., வடமராட்சி, நெல்லியடியில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லியடி பொலிஸார் மோப்ப நாயுடன் நேற்று நடத்திய தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி சந்தேகநபர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவும், 83 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கரணவாய், தும்பளை, குடவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 – 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.