தகாத புகைப்படத்துடன் மாணவிக்கு மிரட்டல்! போலீஸ் வலையில் சிக்கிய ராணுவ சிப்பாய்

0
43

மாணவின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படத்துடன் இணைத்து அச்சுறுத்தல் விடுத்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பண்டாரவளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிப்பாய் மாணவியை அச்சுறுத்திய நிலையில் அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகாத புகைப்படத்துடன் மாணவிக்கு வந்த அச்சுறுத்தல்! பொலிஸார் வலையில் சிக்கிய சிப்பாய் | Student Threatened With Inappropriate Photo

சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபருக்கு வைவீசி காத்திருந்தனர். அச்சுறுத்தப்பட்ட மாணவி பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்விய பயின்று வருவதாக கூறப்படுகிறது.

பொலிஸார் வலையில் சிக்கிய சிப்பாய்

இராணுவ சிப்பாய் சமூக வலைத்தளங்களின் ஊடாக மாணவியை தொடர்பு கொண்டுள்ளதோடு, அவரது புகைப்படமொன்றை நிர்வாண புகைப்படமாக மாற்றி இணையத்தளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

அத்துடன் இணையத்தில் வெளியிடாமல் இருப்பதற்காக தன்னுடன் தகாத உறவுக்கு வருமாறும் அச்சுறுத்தியுள்ளார்.

தகாத புகைப்படத்துடன் மாணவிக்கு வந்த அச்சுறுத்தல்! பொலிஸார் வலையில் சிக்கிய சிப்பாய் | Student Threatened With Inappropriate Photo

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் நுவரெலிய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு அந்த மாணவி தகவல் வழங்கியதோடு, சம்பவ தினத்தில் சந்தேக நபரான இராணுவ சிப்பாயை நுவரெலியா பகுதிக்கு வருமாறு பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய மாணவி அழைத்துள்ளார்.

இதனையடுத்து நுவரெலியாவில் கைதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவரிடமிருந்து ஆணுறைகள், பாலியல் ஊக்கி வில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்நிலையில் பொலிஸார் விாித்த வலையில் ஆணுறை, மற்றும் பாலியல் ஊக்க மாத்திரைகளுடன் இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.